search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்வர் பாபு ஷேக்"

    மும்பையில் கடந்த 1993-ம் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் இந்தியாவால் தேடப்படும் சோட்டா ஷகீலின் சகோதரர் அன்வர் பாபு ஷேக்-கை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர். #Dubaipolice #ChhotaShakeel #1993Mumbaiblast #AnwarBabuSheikh
    மும்பை:

    மும்பையில் கடந்த 12-3-1993 அன்று அடுத்தடுத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களில் சுமார் 250 பேர் உயிரிழந்தனர். சுமார் 700 மக்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு காரணமான தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் மற்றும் அவரது சகோதரர் அன்வர் பாபு ஷேக் உள்ளிட்டோரை தேடப்படும் குற்றவாளியாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

    இதுதவிர, மும்பை மற்றும் தானே பகுதிகளில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்களிலும் போலீசாரின் தேடப்படும் நபர்களின் பட்டியலில் அன்வர் பாபு ஷேக் இருந்து வருகிறார். இவருக்கு பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறை பாதுகாப்பு வழங்குவதாக இந்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட்டுடன் அபுதாபி விமான நிலையத்தில் அன்வர் பாபு ஷேக்கை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளில் மும்பை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதே வேளையில், பாகிஸ்தானிலும் இவர்மீது சில வழக்குகள் இருப்பதால் அன்வர் பாபு ஷேக் யாரிடம் ஒப்படைக்கப்படுவார்? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. #Dubaipolice #ChhotaShakeel #1993Mumbaiblast #AnwarBabuSheikh
    ×